Header

மியன்மாரில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் – இராணுவ தலைவர் உறுதி!

 

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசை, கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி மியன்மார் இராணுவம் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சுச்சி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக இராணுவம் கூறிவருகிறது.

இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சுச்சிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக கட்டுப்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்த போராட்டங்களில் , 900க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில், இராணுவ ஆட்சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் இராணுவ தலைவர் உறுதி அளித்துள்ளார்.

logo