Header

132 நாடுகளில் டெல்டா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு !

 

கடந்த மாதம் உலகளாவிய ரீதியில் குறைவடைந்திருந்த கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த அதிகரிப்பிற்கு டெல்டா வைரஸ் அதிகம் பரவுவதே காரணம். இந்நிலையில் இதுவரையில் டெல்டா வைரஸ் 132 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 47 நாட்களில் அமெரிக்காவில் சுமார் 5 இலட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரேசிலில் 3 இலட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் இந்தோனேஷியாவில் 2 இலட்சத்து 89 ஆயிரம் பேருக்கும், பிரிட்டனில் 2 இலட்சத்து 82 ஆயிரம் பேருக்கும் பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு வாரத்தில் 2 இலட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

logo