
MERS virus, Meadle-East Respiratory Syndrome coronavirus in human lungs, 3D illustration
36 நாட்களுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் 2000 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 2329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியாவார்களாவர். இதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,202 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 26,448 பேர் வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.