Header

அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

 

உலக கொரோனா தொற்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 49 சதவீதத்தினருக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்தமாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்த நிலையில், முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்காவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

logo