Header

டயகம சிறுமி மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

 

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் ஆராயும் காவல்துறை குழு இன்று டயகம பகுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான அந்த காவல்துறை குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றுள்ளது.

இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய சிறுமிகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு குறித்த தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் 11 சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

 


logo