Header

இனிமேல் “கரும்பிலும்” மரபணு மாற்றம் செய்யலாம்..!

 

மிகவும் சிக்கலான மரபணு அமைப்பைக் கொண்டது தாவரம் கரும்பு. எனவே கரும்பு வகைகளை கலப்பு செய்து எமக்கு தேவையில்லாத கூறுகளை நீக்கி தேவையான அம்சங்களை மட்டுமே கொண்ட புதிய வகைகளை உருவாக்குவது கடினமாக இருக்கும் அதே நேரத்தில் அதற்கு பல ஆண்டுகளும் ஆகலாம்.

ஆனால் “கிரிஸ்பர்” என்ற மரபணு திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பில் ஒட்டு முறையை உருவாக்க விஞ்ஞானிகள்  முயன்று வருகின்றனர். பிரபலமான மரபணு திருத்த தொழில்நுட்பமாக இருக்கக்கூடியது “கிரிஸ்பர்” தொழில்நுட்பம் தற்போது கரும்பு ஆராய்ச்சிக்கு முதன் முதலாக “கிரிஸ்பர்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரும்பின் தோற்றத்தில் இரண்டு மாற்றங்களை உருவாக்க முடிகிறதா என்று சோதனை செய்திருக்கின்றனர்.

இதன் மூலம் “கிரிஸ்பர்” தொழில்நுட்பம் கரும்பின் மரபணுவை துல்லியமாக கையாள உதவுகிறதா என்று அறிவதே அவர்களது நோக்கமாக இருந்தது. அண்மையில் இந்த ஆய்வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.முதல் ஆய்வில், கரும்பின் இலை நிறத்தை வெளிர் பச்சை நிறத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கின்றனர்.

அதாவது இதன் மூலம் குறைவான உரங்களை உள்வாங்கி நிறைய எடையை கொடுக்கும் கரும்பு கிடைத்திருக்கிறது.

இரண்டாவது ஆய்வில் “கிரிஸ்பர்” தொழில்நுட்பம் மூலம் குறைவான பூச்சி மருந்து தேவைப்படும் விதத்தில் மாற்ற முடியுமா என சோதித்திருக்கின்றனர். அதிலும் திட்டவட்டமான வெற்றி கிடைத்திருக்கிறது.

ஆனால் கரும்புப் பயிருக்காக காடுகள் அழிக்கப்படுவதுடன் கரும்பு அறுவடைக்கு பின்பு கரும்பின் இலைகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது வரை பல சூழல் பிரச்சனைகளுக்கு கரும்பு காரணமாக இருக்கிறது.

எனவே “கிரிஸ்பர்” தொழில்நுட்பத்தின் மூலம் அந்த குறைகளை நீக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

logo