Header

பறக்கும் மோட்டார் சைக்கிள்…!

மணிக்கு 483 கி.மீ. வேகத்தில் செல்லும் பறக்கும் “மோட்டார் சைக்கிள்” வாகனத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த “ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

இதன் விலை இலங்கை மதிப்பில் 2.83 கோடி எனவும் அதுமட்டுமல்லாமல் இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என “ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனத்தின் சி.இ.ஓ. “டேவிட் மெய்மன்” தெரிவித்துள்ளார்.

இது அதிகபட்சம் 15 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க கூடிய வகையிலும் டீசல் அல்லது மண்ணெண்ணெய்யில் இயங்கும் இயங்க கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் இரண்டு பேர் பயணம் செய்யக்கூடியதாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் தேவைப்படும்போது (விமானி) ஓட்டுநர் இதன் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் இயக்கக்கூடியவகையில் சிறிய இறக்கைகளும் உள்ளன.

logo