Header

சவுதி இளவரசரின் சீர்திருத்த முயற்சி பாதுகாப்பு பணியில் பெண்கள்…!

 

பழமை வாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என எண்ணிக்கொள்ளும் சவுதி அரேபியாவின் இளவரசர் “முஹம்மது பின் சல்மான்” தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை ‘விஷன் (Vision) 2030 ‘ என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில், பெண்களுக்கு கார் ஓடுவதற்கு அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்து உரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, மற்றும் ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது மக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளார்.

தற்போது அப்பகுதியில் பணியாற்றும் பெண்கள் கூறுவதாவது
“நாங்கள் மிகவும் புனிதமான இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணியாக கருதுகிறோம் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்'”என தெரிவித்துள்ளனர்

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo