Header

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்றவர்களுக்கு எச்சரிக்கை..!

 

பொதுமக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால் கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான “அஜித் ரோஹண” தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 51,581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo