Header

பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை!

A close-up of a syringe containing a Pfizer-BioNTech Covid-19 vaccine as it is given to a patient in Cardiff, Wales

 

தனை, ஒகஸ்ட்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஒரே நாளில் இரண்டு மொடெர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமையினால், அவர் சுகயீனமுற்ற நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் பேராதனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கங்கவட்டகோரள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில், ஒரே தாதியினால் இவ்வாறு தனது மனைவிக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் திடீர் சுகயீனமுற்றத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தமது மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பேராதனை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo