Header

சீனாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 உயர்வு !

 

சீனாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெள்ள பாதிப்புகளில் சிக்கித் தவிக்கிறது. ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25 உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் நீர் சூழ்ந்து மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டதால் 10 ஆயிரம் பயணிகளோடு 10க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ஸ்தம்பித்துள்ளது.

China Floods death toll photos over 1 million affected henan province  President Xi calls in PLA - LocalFobs

லுயோங் பகுதியில்,  குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் வெள்ளம் புகாமல் திசை திருப்பும் வகையில் அணைக்கட்டு ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பழுதாகி அவசர சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. ஜெங்ஜு பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த ஒரு இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு வருடத்தில் பெய்யக் கூடிய மழை 3 நாட்களில் கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, கனடாவில் கடுமையான வெப்ப அலை வீசுவதும் ஜெர்மனி, சீனாவும் வெள்ள பாதிப்பில் சிக்கித்தவிப்பதும் பருவ நிலை மாற்றத்தின் விளைவே என நிபுணர்கள் கணித்துள்ளனர்

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo