Header

நாட்டில் நேற்று 1604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

 

நாட்டில் நேற்று 1604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1566 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 289,577 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை , மேலும் 930 பேர் கொரோனா தொற்றிலிருந்து நேற்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 263,758 ஆக அதிகரித்துள்ளது. 21, 949 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் , நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo