Header

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய காந்த ரயில்!


சீனா மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய காந்த ரயிலை கடந்த 2019-ம் ஆண்டு வடிவமைத்தது‌‌. கடந்த வருடம் ஜூன் மாதம் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டொங் (Shandong) மாகாணத்தின் துறைமுக நகரமான கிங்டோவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

China Debuts 'Floating' Maglev Train That Can Travel At 620 Kmph

இந்நிலையில் இந்த அதிவேக காந்த ரயிலை சீனா நேற்று பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தியது. கிங்டோ நகரில் இந்த புதிய போக்குவரத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தி உதவியுடன் மிதந்தபடி செல்லும் இந்த ரயில் 2 முதல் 10 ரயில் பெட்டிகள் வரை கொண்டு பயணிக்கும் திறன் கொண்டது எனவும், ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பயணிப்பதன் மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் இந்த ரயிலை குறிப்பிடுகின்றனர்.

 

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo