Header

விண்வெளி பயணம் குறித்து ஜெப் பெஸோஸ் கருத்து!

 

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் ப்ளூ ஒரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை நேற்று மாலை 05.00 மணிக்கு மேற்கொண்டது.

Jeff Bezos Space Flight: Amazon Founder and Blue Origin Team Launch New  Shepherd – Watch Live – Bangladesh News

ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெபார்ட் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜெப் பெசோஸ் அடங்கிய குழு வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளது. 11 நிமிட விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெக்ஸாஸ் பகுதியில் இந்த குழு தரையிறங்கியுள்ளது.

Jeff Bezos Successfully Completes Suborbital Travel Aboard New Shepard,  Does Back Flips in Zero Gravity | Technology NewsJeff Bezos Successfully Completes Suborbital Travel Aboard New Shepard,  Does Back Flips in Zero Gravity | Technology News

இதில் ஜெப் பெசோஸ், அவரது சகோதரர், 82 வயதான பெண் விமானி வொலி ஃபங்க் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் என மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர்.

முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய ஜெப் பெசோஸ், ”இது வாழ்வின் மிக சிறந்த நாள்” என குறிப்பிட்டார்.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo