Header

அமெரிக்காவில் காட்டுத்தீ 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரை..!

 

அமெரிக்காவின் “ஒரிகான்” மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது.

அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ  அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

‘பூட்லெக் தீ’ என்று அழைக்கப்படும் இக்காட்டுத் தீயினால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் அத்தோடு கிட்டத்தட்ட 160 வீடுகள் அழிவடைந்துள்ளன.

ஜூலை 6ஆம் திகதி தொடங்கி “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரத்தை விடப் பெரிய பகுதியை இந்த காட்டுத்தீ அளித்துவிட்டதுடன் போர்ட்லேண்டின் தென்கிழக்கில் 300 மைல் (480 கி.மீ) எரியும் இந்த தீ 160க்கும் மேற்பட்ட கட்டடங்களையும் அழித்துள்ளது.

இந்த காட்டுத்தீ அதிக வெப்ப அலைகள் மற்றும் அதிக காற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிறது.

 

logo