Header

நடிகர் ரஜினியின் அடுத்த திரைப்படம்..

 

சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட, தர்பார் படங்களிற்கு பின்பு அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார் அவர் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் இந்த திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனால் தற்போது விரைவில் ரஜினியின் அடுத்த 169வது திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் ரஜினிக்கு “கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், தேசிங்கு பெரியசாமி” உள்ளிட்ட சில இயக்குனர்கள் கதை தயார் செய்துள்ளதக்க கூறப்படுகிறது.

அனால் இவர்கள் மூன்று பேரில் இயக்குனர் “தேசிங்கு பெரியசாமி” அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இவர் “துல்கர் சல்மான்” நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் மேலும் பிரபலமானவர்.

இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை ரஜினி நேரில் அழைத்து பாராட்டி இருக்கின்றார்.

அப்போது தனக்கு கதை இருக்கிறதா என்று ரஜினி கேட்டபோது உடனே தேசிங்கு பெரியசாமி ஒரு கதையை சொல்லி இருக்கின்றார் அது ரஜினிக்கு பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது. எனவே இத்திரைப்படத்தை விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த “ஏஜிஎஸ்” நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை 6 மாதத்தில் நடித்து முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo