Header

போதைப்பொருளுடன் குடு நோனி கைது..

 

ஒரு தொகை ‘ஹெரோயின்’ எனும் போதைப்பொருளுடன் குடு நோனி என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொம்மை ஒன்றினுள் மறைத்து வைத்து குறித்த ஹெரோயினை அநுராதபுரத்திற்கு அனுப்ப முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கடுவலை பகுதியில் உள்ள அவரது வீட்டை பரிசோதனை செய்தபோது அங்கிருந்து மேலும் 56 கிராம் “ஹெரோயின்” கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

logo