Header

நடிகர் விஜய்க்கு அபராதம்…

தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து “ரோல்ஸ் ராய்ஸ்” என்னும் பலகோடி பெறுமதியான காரை இறக்குமதி செய்திருந்தார். ஆனால் தற்போது அந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிபதி கூறுகையில், சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது ஆகவே சினிமா நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மற்றும் வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, ஒரு நாட்டினுடைய குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என தெரிவித்துள்ளார்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo