Header

எரிமலை தரும் உலோகப் புதையல்கள்..!

 

சுரங்கத் தொழிலுக்கு தற்போது உலகெங்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது.

எனவே வருங்காலத்தில் தங்கம், தாமிரம், லித்தியம் போன்ற உலோக தேவைகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு தான் “ஒக்ஸ்போர்ட்” பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உத்தியை முன்வைத்துள்ளார்கள்.

உலகெங்கும் அவ்வப்போது வெடித்து சிதறும் எரிமலைகளின் அடிப்பகுதியில் ஏராளமான எரிமலைக் குழம்புகள் ஆறி பாறைகளாக மாறிக்கிடக்கின்றன.

எனவே அவற்றை புதுவிதமான சுரங்கத் தொழில்நுட்பங்களாக உருவாக்கி எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் உலோகங்கள் கூட பண்டைய கால எரிமலைக் குழம்புகளாக தான் இருக்கின்றன.

ஆனால் கடந்த சில நுாற்றாண்டுகளாக எரிமலைப் பகுதிகளில் உள்ள பாறைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆகவே எரிமலைகளின் மேலிருந்து 2 கி.மீ. கீழே உள்ள குழம்புகள் மற்றும் பாறைகளை குடைந்து எடுத்தால் பல விலை உயர்ந்த உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என்றும் அதே நேரம் பூமியின் வெப்பத்தை வைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என “ஒக்ஸ்போர்ட்” பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதனால் தற்போது இதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo