Header

உலகின் மிகப்பெரிய வைரம்…

 

உலகின் மிகப்பெரிய வைரம் தென் ஆப்ரிக்காவில் 1905 ஜனவரி 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் எடை 3106.75 கரட்டாக உள்ளது. இது தென்னாபிரிக்காவின் “கலினன்” எனப்படும் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த வைரத்திற்கு சுரங்கத்தின் தலைவர் “தாமஸ் கலினன்” என அவருடைய பெயர் வைக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட வைரம் அந்த சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்து 18 அடி ஆழத்தில் தோண்டிய போது கிடைத்திருக்கிறது. இதன் நீளம் 10 செ.மீட்டராகவும் , அகலம் 6.35 செ.மீட்டராகவும் காணப்படுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்டதும் அப்போதைய பிரிட்டனின் மன்னரான “ஏழாம் எட்வர்ட் ” க்கு பரிசாக வழங்கப்பட்டு அதன் பின்னர் பிரிட்டன் அரச குடும்ப பயன்பாட்டுக்காக இந்த வைரம் ஒன்பது சிறிய வைரங்களாக பிரிக்கப்பட்டது.

logo