Header

கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Computer image of a coronavirus

 

சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக கொரோனா பரவல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

நேற்று (05) கொழும்பில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Over 20,000 Sri Lankan health workers strike, defying government laws -  World Socialist Web Site

நிறைவுக்கான மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத் துறைசார் 14 தொழிற்சங்கங்கள் நேற்று (05) முதல் தொடர் பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

சுகாதாரத் துறையில் தங்களை புறக்கணித்து அரசாங்கம் செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இதுத்தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் நேற்று (05) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் , இன்றும் இந்த போராட்டம் தொடரவுள்ளது.

இந்தவிடயம் இலங்கையின் சுகாதார நிலைமையையும், கொரோனா பரவல் நிலைமையையும் மேலும் அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

 

protestprotest

logo