Header

மொடெர்னா டெல்டா வைரசுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படுகின்றது!

 

அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசியான மொடெர்னா, இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்திருப்பதாக மொடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்டா திரிபுக்கு எதிராகக் காத்திரமான எதிர்ப்பாற்றலை இந்த தடுப்பூசி பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதார துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தென்னாபிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட பீட்டா திரிபுக்கு எதிராக மொடெர்னா வினைத்திறன் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


logo