Header

உலகின் அழகிய சாலைகளின் பட்டியலில் கிரேட் ஓசன்” சாலை முதலிடம்!

 

சமீபத்தில் உலக அளவில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றின் சார்பில் இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு உலகில் உள்ள அழகிய சாலைகளின் படத்தை இணைத்து கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் மொத்தம் 70 இலட்சம் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தது. இதில் அந்த சாலைகளின் தொலைவில் 1.6 கி.மீ ஒன்றுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இந்த புகைப்படங்களில் அவுஸ்திரேலியாவின் “டோர்குவே” மற்றும் ஆலன்ஸ்போர்ட் பகுதிகளை இணைக்கும் “கிரேட் ஓசன்” சாலை (8 ஆயிரத்து 418 புகைப்படங்கள்) முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள “பிக் சுர்” சாலை (5 ஆயிரத்து 226 புகைப்படங்கள்) 2-ம் இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில் 3-ம் இடத்தில் அமீரகத்தின் “ஜெபல் ஹபீத்” மலை பாதை (4 ஆயிரத்து 840 புகைப்படங்கள்) இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் பலரை கவர்ந்த அழகிய சாலை என்ற பெருமையை “ஜெபல் ஹபீத்” பெற்றுள்ளது.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo