Header

நாம் பருகும் தண்ணீர் பாதுகாப்பானதா?

 

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் மாத்திரமின்றி, பருகும் நீர் குறித்தும் அதிகளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மீள்சுழற்சி மற்றும் வடிகட்டி அருந்துதல் மட்டுமே போதுமான முறையாகாது. நீங்கள் குடிக்கும் நீர் இயற்கை கனிம வளங்களைப் பெற்ற தண்ணீராக இருக்க வேண்டும்.உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் உள்ள நீர் வெவ்வேறு மாதிரி இருக்கும். எந்த நீரினை
எதற்கு பயன்படுத்தலாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தந்த மண்ணின் தன்மையைப் பொறுத்து நீரின் சுவை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள நீரில் பலவித தாதுக்கள் மற்றும் பி.எச் மதிப்பும் மாறுபடும். இதனால் கூட நீரின் சுவையில் சில நுட்பமான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் குடிக்கும் நீரைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் என்று நம்பினாலும், உங்களுக்குத் தெரியாத சில விடயங்கள் உள்ளன.

மினரல் வோட்டர் என்று வரும் போது கூட நாம் சரியான தண்ணீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தாது நீர் (மினரல் வோட்டர்) அல்லது தாதுப் பொருள் அதிகமாக உள்ள நீரைக் குடிக்க பயன்படுத்தப் படக்கூடாது. அதேபோல் தண்ணீரின் சுவையைப் பார்த்தும் நீங்கள் உங்களின் குடிநீரை தேர்ந்தெடுக்கக் கூடாது.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo