Header

True Callerல் அறிமுகமாகியுள்ள மூன்று புதிய அம்சங்கள்!

 

பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களில் 60% முதல் 70% வரையிலான மக்கள் True Caller செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன் செய்யும் நபர் யார் ? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்த அப்ளிகேஷன் கொண்டு வரப்பட்டது. பின்னர் மக்கள்
இதற்கு அளித்த ஆதரவினால் True Caller நிறுவனம், மேலும் சில அப்டேட்களை வழங்கியது.

இதன்படி க்ரூப் வொய்ஸ் கோலிங், இன்பொக்ஸ் கிளீனர், ஸ்மார்ட் SMS உள்ளிட்ட அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இதனை அண்ட்ரொய்ட் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சமீபத்திய வேர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்நிலையில் க்ரூப் வொய்ஸ் கோல் அம்சம் க்ரூப் வொய்ஸ் கோலின் போது, க்ரூப்பில் பயனருக்கு தெரியாமல் ஏதேனும் ஸ்பேம் பயனர்கள் சேர்கப்பட்டிருந்தால் உடனே அவர்களை ட்ரூகோலர் அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

பின்பு பயனர்கள் புதிய பங்கேற்பாளர்களை தங்களது போன் கண்டக்டில் சேர்க்காமலேயே வொய்ஸ் கோலின் போது அட் செய்ய முடியும், மற்றும் பயனர் மற்றொரு அழைப்பில் அல்லது ஓஃப்லைனில் பிஸியாக இருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தும். பின்பு க்ரூப் வொய்ஸ் கோலின் முக்கிய அம்சம் என்னவென்றால் பங்கேற்பாளரின் நகரத்தை பிரதிபலிக்கும்.

இன்பொக்ஸ் கிளீனர் அம்சமானது தேவையற்ற மற்றும் பழைய மெசேஜ்களை சில நிமிடங்களில் அழிக்க உதவும். மேலும் இந்த அம்சம் மெனுவில் எத்தனை பழைய ஓடிபி-கள் மற்றும் ஸ்பேம் SMS இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும். பின்பு கிளீன் ஒப் பட்டனை கிளிக் செய்தால் உங்கள் முக்கியமான தரவைப் பாதிக்காமல் பழைய SMS ஐ விரைவாக அகற்றும்.

ஸ்மார்ட் SMS அம்சமனாது இது ஸ்பேமை அடையாளம் கண்டு பில்டர் செய்யவும், பயனுள்ள தகவல்களை வகைப்படுத்துவதும், நிலுவையில் உள்ள கட்டணங்களைப் பற்றி நினைவூட்டவும் பயன்படும்.
குறிப்பாக இந்தியா கென்யா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என்றும், விரைவில் அமெரிக்கா, எகிப்து, மலேசியா, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அனுப்பிய கருத்துக்கள் அடிப்படையில் இந்த புதிய மூன்று அமசங்களை கொண்டுவந்துள்ளதாக True Caller நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


logo