Header

பேரிக்காய் இத்தனை நன்மைகளை தருகிறதா?

 

பேரிக்காய், அப்பிள் வகையைச் சேர்ந்தது. அப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால், இதை “ஏழைகளின் அப்பிள்’ என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பேரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பேரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பேரிக்காய் உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது. திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும். பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனோய்ட்கள் எனப்படும் குறிப்பிடத்தக்க இரு வகையான உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (அன்டி ஒக்சிஜன்ட்) உள்ளன. இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

பலருக்கு தெரியாத பேரிக்காயில் நிறைந்துள்ள நன்மைகள்!!! | The Health Benefits  Of Pears - Tamil BoldSky

பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அன்றாடம் பேரிக்காய் சாப்பிடுவதால் அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும், ஜீரணமும் ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே. பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல்
பேரிக்காய்க்கு உள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo