Header

இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் டெல்டா ப்ளஸ்ஸாக உருமாற்றம்!

 

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவிவந்த டெல்டா கொரோனா வைரஸ் தற்போது டெல்டா ப்ளஸ் ஆக உருமாற்றமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து CSIR மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , டெல்டா வகை வைரசில் இருந்து இந்த புதிய உருமாறிய வகை வைரஸ் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டெல்டா ப்ளஸ் வகை வைரஸ், இந்தியாவில் அதிகளவு பரவவில்லை எனவும்,  ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்தவகை உருமாற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா ப்ளஸ் வகை இப்போதுதான் இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பதால் இப்போதைக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

's  transforms into !

logo