Header

டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா!

 

சீனாவின் டிக்-டொக் மற்றும் வீ சட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் அப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து டிக்டொக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றில் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டொக் மற்றும் வீ சட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக்-டொக் மற்றும் வீ சட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo