Header

ட்விட்டருக்கு தடை – நைஜீரியா அரசுக்கு ட்ரம்ப் பாராட்டு!

 

கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. தங்கள் நிறுவன விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. எனினும் தன்னுடைய பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் ட்விட்டர் செயலிக்கு தடைவிதிப்பதாக நைஜீரிய அதிபர் முகமது புஹாரி அறிவித்தார்.

இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவு வழங்கியுள்ளதோடு, ‘சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 வருடங்களுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo