Header

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி!



கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான 100 கோடி தடுப்பூசிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வழங்குவதற்கு ‘குவாட்’ (Quad countries) என்னும் 4 நாடுகள் அமைப்பில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவற்றின் தலைவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல்முறையாக காணொலிக்காட்சி வழியாக சந்தித்துப் பேசியபோது உறுதி பூண்டனர்.

இந்த 100 கோடி தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ‘குவாட்’ அமைப்பின் வாக்குறுதி நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி காணொலிக்காட்சி வழியாக நடத்திய சந்திப்பில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரீசனும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவும் கலந்துகொண்டு பேசியது நினைவுகூரத்தக்கது.

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo