Header

15 நிமிட சைக்கிளிங் இத்தனை நன்மைகளை தருகிறதா?

Caucasian woman riding bicycle near beach

 

சைக்கிளிங் பயிற்சி உடலை சீராகவும், திடமாகவும் வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. ஒருவர் தினமும் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தால், அது வழங்கும் நன்மைகளோ ஏராளம். மேலும் சைக்கிளானது அன்றாடம் அலுவலகம், பள்ளி அல்லது பூங்கா போன்ற இடங்களுக்கு பயணிக்க ஏற்றது. சைக்கிளிங் செய்வது உடல் மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

சைக்கிள் ஓட்டுவது அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் வளர்சிதை மாற்ற அளவை அதிகரிக்கவும், தசையை
உருவாக்குவதற்கும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் பொருத்தமாக இருக்கும் ஒரு சிறப்பான வழியாகும். ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டுவது, தீவிரம் மற்றும் ஓட்டுபவரின் எடையைப் பொறுத்து, 400-1000 கலோரிகளை எரிக்க உதவுவதாக கூறப்படுகிறது. எனவே நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், தினமும் சைக்கிளையும் ஓட்டுங்கள்.

 

Does 15 minute  bring so many ?

logo