Header

பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் விபத்தில் பலி!

 

பாகிஸ்தானில் கில்கிட் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் இருந்து ராவல்பிண்டி என்ற இடத்திற்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் நேற்று முன்தினம் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மலைப்பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி உட்பட வாகனத்தில் பயணித்த 16 பேரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு சென்று உடல்களை மீட்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். சிந்து நதி அதிக ஆழம் மற்றும் கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள உள்ளூர் நபர்கள் உதவியுடன் உடல்களை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.