
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குவாட்டமாலாவுக்கு (guatemala) அரசியல் ரீதியான பயணமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தார். இதன்போது ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் ஒன்றின் மூலம் நேற்று மதியம் குவாட்டமாலா புறப்பட்டார். இந்நிலையில், அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வொஷிங்டனின் புறநகரில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு மீண்டும் திரும்பிய விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது.
பின்னர் வேறொரு விமானத்தில் கமலா ஹாரிஸ் புறப்பட்டு திட்டமிட்டப்படி குவாட்டமாலாவுக்கு சென்றடைந்தார். துணை அதிபராக பொறுப்பேற்றதன் பிறகு அரசியல் ரீதியாக மேற்கொண்ட முதல் சர்வதேச பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.