Header

சளியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள்!

 

01. ஒரு கைப்பிடி தூதுவளை, ஒரு கைப்பிடி துளசி, ஒரு வெற்றிலையுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு, அரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் முழு மல்லி சேர்க்கவும் (திப்பிலி இருந்தால் அரை டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்).

இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். இதில், பெரியவர்கள் ஒரு டம்ளர், 15 வயதிற்கு உற்பட்டவர்கள் அரை டம்ளரும், 8 வயதுக்குக் கீழான குழந்தைகள் 10 மிலி என, 15 நாட்களுக்கு ஒருமுறை பருகி வரவும். நாள்பட்ட சளியையும் வெளியேற்றிவிடும். மேலும், நுரையீரலை பலப்படுத்தி சளி தங்காமல் காக்கும்.

02. ஒரு கைப்பிடி குப்பைமேனியை எடுத்து அலசி, அதோடு 4 மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். இதை மூன்று நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரவும். இதைக் குடித்த பின்னர் நிச்சயம் வாந்தி வரும் பயப்பட வேண்டாம்… அது சளி வெளியேற்றமே. மேலும், குப்பைமேனியால் குப்பையான மேனியும் அழகுபெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும்.

logo