Header

இன்றுமுதல் 5000 ரூபா கொடுப்பனவு……

 

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான 5000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (02) முதல் வழங்கப்படவுள்ளது .

அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெறும் ,  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகவும், பயணக்கட்டுப்பாட்டு தடையினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்காகவும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக சுமார் 30 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதியோர்களுக்கான கொடுப்பனவு, விவசாய, கடற்தொழில் ஓய்வூதிய வேதனம், சமுர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவு என்பன வழங்கப்படவுள்ளதோடு எஞ்சிய பணத்தை சேர்த்து 5000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

logo