Header

கொரோனா நோயாளிகளை நாய்கள் மூலமாக கண்டு பிடிக்க முடியும்!

 


பிரிட்டனில் எல்.எஸ்.எச்.டி.எம். பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி வாயிலாக ஒருவர் கொரோனா நோயாளியா இல்லையா என்பதை 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து எல்.எஸ்.எச்.டி.எம். நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறியதாவது ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை வாயிலாக அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. இது தங்களுடைய ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக பிரிட்டன் மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கியிருக்கின்றார்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சொக்ஸ் உள்ளிட்டவற்றை நாய்களிடம் கொடுத்து மோப்ப சக்தியை உணரச் செய்திருக்கின்றனர். இதில் 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு அவற்றில் கொரோனா நோயாளிகள் 325 பேர், மற்றும் நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டிருக்கிறது. இது பிரிட்டன் ஆய்வாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு மோப்ப நாய்கள் மூலம் அரை மணி நேரத்தில் 300 பேரிடம் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.