Header

நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படும் பகுதிகள்…


இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் நாளை 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருவிட்ட 155 கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ கிராம சேவகர் பிரிவின் தெல்கமுவ நகரின் 155 பிரிவும் தனிமைப்படுத்தப் படவுள்ளன.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரவத்தை 80 பிரிவு , கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட ஈரியவெடிய கிராமசேவகர் பிரிவு ஆகியனவும் நாளைய தினம் தனிமை படுத்தப்படவுள்ளன.

மேலும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை, சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

 நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படும் பகுதிகள்...

logo