Header

13 ஆவதுஆண்டில் வெற்றி நடைப்போடும் வானலை அரசன் வசந்தம் FM…….

 

12 வருடகால வெற்றியோடு 13 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக கால்பதிக்கின்றது மக்கள் மனங்களில் தமிழ் மணம் வீசும் வானொலி அரசன் வசந்தம் FM. சுயாதீன ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமாக 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தம் வானொலி, ஆரம்பத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் இலங்கை முழுவதற்குமான சேவையை தொடர்ந்தது. 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலைவரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்து. இன்று தனது தனித்துவமான நிகழ்ச்சிகளினாலும், தரமான பாடல்களினாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து கொண்டுள்ளது.

சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத்ரோஹனவின் தலைமையின் கீழ் சிறப்பாக இயங்கிவரும் வசந்தம் வானொலியின் நிகழ்ச்சிகள், வெறுமனே பொழுது போக்குக்காக அல்லாமல், நேயர்களின்; ரசனையை கண்டறிந்து அதற்கேற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுயாதீன ஊடக வலையமைப்பின் நிர்வாக குழுவைப் பொறுத்தவரையில் வசந்தம் வானொலியின் 13 வருடகால வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கின்றது. அந்தவகையில் சுயாதீன ஊடக வலையமைப்பின் நிறைவேற்று அதிகாரி நளின் குமாரநிஷங்க, பொதுமுகாமையாளர் – W.P.M.விஜயசிங்க, பிரதி பொதுமுகாமையாளர் அசோக கருணாநாயக்க, செய்திப் பிரிவின் பிரதி பொதுமுகாமையாளர் சுதர்மன் ரதலியகொட ஆகியோர் வசந்தம் வானொலியை திறம்பட வழிநடத்துகின்றனர்.

ஏனைய வானொலிகளோடு ஒப்பிடுகையில் வசந்தம் வானொலியின் நிகழ்ச்சிகள் தனித்துவமானவை, தரமானவை. மக்களின் ரசனையை அறிந்து பொழுதுபோக்கோடு, பயன்தர கூடியவகையில் நிகழ்ச்சி நிரலை வடிவமைத்திருக்கிறார் வசந்தம் வானொலியின் பிரதானி M.L.கிருபா. வாரநாட்களின் நிகழ்ச்சி நிரல் இறையோசையோடு ஆரம்பமாகின்றது. அதனைத் தொடர்ந்து விடியல், வணக்கம் வசந்தம், இடைக்காலப் பாடல்களை சுமந்துவரும் ராகம் சுகமானது, மதியநேர குதூகலம், ஏழாம் அறிவு, வசந்தம் Express, உன்னருகே நானிருந்தால், வசந்த நிலா, நட்சத்திர வானம், இதம் தரும் ராகம் என வாரநாட்களின் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. வாரநாட்களின் நிகழ்ச்சிகளை M.L.கிருபா, திருவேரகன், சசிரேகா, ரஞ்சனி, பிரியா, ருபீனா, ஜஸ்டின், நந்தகுமார், டார்வின், செபஸ்டியன், கஜிந்தன், புவனேஷ, நித்தியா, அனோஜ்,            துஷாந்தன் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

அதேபோல விடுமுறை நாட்களிலும் நேயர்களுக்கான ரசனையை மாத்திரமல்ல நேயர்களின் நலன் கருதிய நிகழ்ச்சிகளையும் தந்துகொண்டிருக்கின்றது வசந்தம் வானொலி. வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமை விடியல், மருத்துவம், . மலரும் மொட்டுக்கள் (சிறுவர் நிகழ்ச்சி) மோதிவிளையாடு, பாடும் நிலா, விடுமுறைக் கொண்டாட்டம், வசந்த கலாட்டா, ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஓய்வான ஞாயிற்றுகிழமை நாளில் விடியல், சட்டம் , இது நம்ம தியேட்டர், Top Chart, இது எங்க ஏரியா, இனிக்கும் இசை, அதிரடி ஆட்டம், விடுமுறைக் கொண்டாட்டம், நெஞ்சில் நின்றவை, நட்சத்திரவானம், என விடுமுறைநாள் நிகழ்ச்சிநிரல் அமைகிறது.

ஒரு வானொலியின் வளர்ச்சிக்கு நிகழ்ச்சி பிரிவு எந்தளவு முக்கியமோ, அதே அளவு செய்திப்பிரிவும் முக்கியம். அந்தவகையில் வசந்தம் வானொலியின் செய்திப்பிரிவும் மக்களுக்கு உண்மையான தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கிக் கொண்டிருக்கின்றது. செய்திப் பிரிவின் பிரதிபொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட தலைமையிலான வசந்தம் வானொலி செய்திப்பிரிவில் அபாஸ் மொஹமட் ,அஸ்கர், ஸ்ரீதர், விஜிதா ஸ்ரீதர். உதயஷாந்தி வெலிங்டன், சாந்தி பிரசன்னா, சுமதி எமில்டன், அசிம், கவிதா, டிலுக்ஷனா ஆகியோர் தங்களின் பங்களிப்பை சிறப்புற செய்துவருகின்றனர்.

மேலும் விஜய் உள்ளிட்ட திட்டமிடல் விரிவாக்கள் பிரிவுமற்றும் கார்த்திக் சுதீன் உள்ளிட்ட சந்தைப்படுத்தல் பிரிவின் வழிகாட்டலின் கீழ் வெளிக்கள நிகழ்வுகளையும் வசந்தம் வானொலி சிறப்பாகவே செய்துவருகிறது. கடந்த காலங்களில் வசந்தத்தின் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்திருந்தோம் மக்களின் சிக்கலான நேரங்களிலும், இயற்க்கை அனர்த்தங்களின் போதும், இறுதியாக கொரோனா காலப்பகுதியிலும் வசந்தத்தின் உதவும் கரங்கள் திட்டத்தினூடாக நிவாரணங்களை வழங்கியிருந்தோம், நாடளாவிய ரீதியில் பாரபட்சம் இன்றி மருத்துவ முகாம்களை நடத்தியிருந்தோம். 4 மதங்களையும் கௌரவப்படுத்தும் சமய நிகழ்வுகள், பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகளையும், வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தோம்.

அதுமாத்திரமன்றி வேறு எந்த வானொலியும் முன்னெடுக்காத முயற்சிக்காத வசந்தத்தின் VPL மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டிகளை நாடளாவியரீதியில் நடத்தி இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிகொண்டு வந்திருக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் VPL போட்டிதொடர் 2015, 2017, 2019, ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் தரத்திற்க்கு அமைவாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்டது. வீரர்களுக்கான பெறுமதிமிக்க பணப்பரிசுகள், வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. தனித்தன்மை வாய்ந்த வசந்தத்தின் VPL 2021 நான்காவது தடவையாகவும் வசந்தம் FM பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ளது. இந்தபோட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 100000/= ரூபா பணப்பரிசோடு வெற்றிக்கேடயமும், இரண்டாம் இடத்தைபெறும் அணிக்கு 50000/= ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

வுhனொலி வரலாற்றில், வானொலி இசைநாடகங்களுக்கென தனியொரு முத்திரைபதித்த பெருமை வசந்தம் வானொலியையே சாரும். 2016 – இராவணகாவியம் வானொலி இசை நாடகத்தினூடாக ஆரம்பமான பயணம் அதைத் தொடர்ந்து 2018 – உடைந்த நிலா, 2019 – துரியோதன சரித்திரம் , 2020 –நள தமயந்தி ஆகிய வானொலி நாடகங்களை படைத்தது. இந் நாடகங்களில் நம்மவர் குரலில் வரலாற்று கதாபாத்திரங்களை கண்முன் கொண்டுவந்து மாயாஜால வித்தைகள் செய்த தயாரிப்பாளர் டார்வின் இத்தோடு நிறுத்திவிட போவதில்லை. மீண்டும் வரலாற்றின் புதையலில் புதைந்திருந்த ஒரு சகாப்தத்தை உங்களுக்காய் மீட்டுவருகிறார்,’மாவீரன்சங்கிலியன்’ எனும் மாபெரும் தமிழ் மன்னனை வானொலி இசை நாடகத்தினூடாக. எதிர்பாருங்கள் வசந்தம் வானொலியின் 13 வது பிறந்தநாளில்!

இதுவரை காலமும் எங்களை ஊக்குவித்து தோள்கொடுத்த எல்லா தோழமைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. இனிவரும் காலங்களிலும் உங்கள் மனதின் சிம்மாசனத்தில் உச்சம்பெற்ற வானொலியாய் வசந்தம் வானொலி வலம்வரும் என்பதில் எவ்வித ஐயமும்மில்லை .

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo