Header

ரசிகர்களை மீட்டு வருவாரா சுல்தான்

 

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கத்திற்கு பிறகு திரையுலகம் ஏறக்குறைய விழுந்தே கிடக்கின்றது. கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால் ரசிகர்கள் பெரிதாக திரையரங்குகளுக்கு வருகை தருவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

பொங்கலை முன்னிட்டு வெளிவந்த தளபதியின் மாஸ்டர் படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் அதிகமாக திரையரங்குகளில் கூடினார்கள். அதற்க்கு முன்னர் வெளி வந்த படங்களும் சரி, பிறகு வெளியான படங்களும் சரி பெரிதாக வசூலீட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனிடையே அடுத்து நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

தமிழ் நாட்டில் சுமார் 450 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு போல இந்தப்படத்துக்கும் ரசிகர்கள் வருகைதருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்குறார்கள்.

இத்தனை தேர்தல் பரபரப்புக்கும் மத்தியில் சுல்தான் படத்திற்கும், அடுத்தவாரம் வெளியாகவுள்ள கர்ணன் படத்திற்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ளது. திரையுலகம் மீள உயிர்த்தெழ சுல்தான் படம் காரணமாக இருக்கும் என அனைவரும் நம்புகின்றார்கள்

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo