Header

உங்கள் குழந்தைகளின் பற்களை பாதுகாக்க சில வழிகள்!


குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிப காலம் வரை நீடிக்கும். எனவே சிறு வயதிலிருந்தே பிள்ளைகளின் பற்கள் பராமரிப்பு மிக முக்கியமானது.

மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பற்தூரிகையும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் குழந்தைக்கான பற்தூரிகை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலோன் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும். அதேவேளையில் சிலிகோன் போன்ற அமைப்பிலான பற்தூரிகைகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பற்தூரிகையை பயன்படுத்தலாம்.

Protect Your Baby's Teeth From Cavities – Pediatric Dentistry of Suffolk  County –

உங்கள் குழந்தைக்கான பற்பசையை தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பற்பசை சிறிதளவு போதும். ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிப்பார்கள் . பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பற்பசையை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பற்துலக்கும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றனர். விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.

அதிக இனிப்புகளை குழந்தைகளுக்கு உண்ண கொடுத்தாலோ அல்லது, ஒவ்வொரு உணவு வேளைக்கு பிறகும் பற்துலக்குவது , வாயை சுத்தம் செய்யும் விதத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo