Header

பிரபல நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

அவரது மறைவுக்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். இதய அஞ்சலி கணேசா..” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo