Header

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி காலமானார்.

கிழக்காபிரிக்க நாடான தன்சானியாவின் அதிபர் ஜோன் மகுஃபுலி (John Magufuli) தனது 61 ஆவது வயதில் காலமானார்.

அவர் டார் எஸ் ஸலாம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு துணை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி கடந்த இரு வாரங்களாக மக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. அதுமாத்திரமன்றி அவரின் உடல்நிலை தொடர்பில் பல்வேறு வதந்திகள் நிலவி வந்த நிலையில் நேற்று அவர் காலமானதாக உத்தியோக பூரவமற்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் இறப்பு செய்தி உறுதிப்படுத்த படாத செய்தி என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வருகின்ற 14 நாட்களுக்கு தன்சானியாவில் துக்கத்தினம் அனுஷ்டிக்க பட உள்ளதோடு தேசிய கோடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

logo