
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிவரும் ’நெற்றிக்கண்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாள திரைப்படமான ’நிழல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்படமான ’நிழல்’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் என்பவர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி இயக்கியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 2வது வாரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவின் ’நிழல்’ வெளியாகும் அதே திகதியில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்திவிராஜ் நடித்துள்ள ‘கோல்ட் கேஸ்’ என்ற திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
0