Header

தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹொலிவுட் படத்தின் முக்கிய அப்டேட்

 

நடிகர் தனுஷ் ஏற்கனவே “extraordinary journey of the bagir” என்ற ஹொலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்குகிறார்கள். இதில் தனுசுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. இதனை இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றுள்ளார். இப்படத்தை வருகிற 2022-ம் ஆண்டு நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo