Header

கணினியில் WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி என்று தெரியுமா?

பேஸ்புக் இன்க் (Facebook Inc) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்துகிறோம். ஆனால், குரல் மற்றும் வீடியோ அழைப்பையும் டெஸ்க்டாப் கணினியில் மேற்கொள்ள முடியும் என்பது தெரியுமா?

பயனர்கள் இப்போது மொபைல் போனை பயன்படுத்துவதுப் போலவே, டெஸ்டாப்பிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம். வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கு டெஸ்க்டாப் கணினிகளை பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகள் end-to-end encrypted எனப்படும் குறியாக்கம் செய்யப்படும் என்றும் வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்தது.

பெரிய திரைகளில் அழைப்புகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கையினால், வீடியோ-கான்பரன்சிங் பிக்விக்ஸ் ஜூம் (bigwigs Zoom) மற்றும் கூகுள் மீட் (Google Meet) போன்றவற்றிற்கு இணையாக வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக உருவெடுக்கும் திட்டம் தொடர்பான தெளிவாக இலக்குக் எதுவும் நிறுவனத்திடம் இல்லை.

குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை இயல்பாக பாதுகாப்பாக பயன்படுத்த பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை செய்துள்ளது. எனவே வாட்ஸ்அப் அழைப்பை மொபைலில் இருந்து ஒருவர் செய்கிறாரா அல்லது அல்லது கணினிகளிலிருந்தா என்பதைக் கேட்கவோ பார்க்கவோ முடியாது.

“நாங்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாட்டில் அழைப்புகள் கொடுக்கும் வசதிகளைத் தொடங்குகிறோம், எனவே நாங்கள் உங்களுக்கு நம்பகமான மற்றும் உயர்தர அனுபவத்தை வழங்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம். எதிர்காலத்தில் குழுவாக குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் சேர்க்கும் விதத்தில் இந்த அம்சத்தை விரிவுபடுத்துவோம்” என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயால் கடந்த ஆண்டு உலகமே லாக்டவுனில் சிக்கியபோது, மக்கள் தொலைபேசிகளில் அழைக்கும் வழக்கம் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

“கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஒரே நாளில் இதுவரை 1.4 பில்லியன் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டன. இது அதிக அழைப்புகள் செய்த சாதனையாகும். பலர் தங்கள் அன்புக்குரியவர்களைத் தவிர, புதிய வேலை முறைக்கு மாறினார்கள். அப்போதும், வீட்டில் இருந்து வேலை செய்யும்போதும், மொபைல் அழைப்புகளும், அதிகமாகின.  நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாமல், முடிந்தவரை நேரில் நெருங்கி உணரவேண்டும் என்ற வாட்ஸ்அப்பின் முயற்சியின் இது” என்று வாட்ஸ்அப் (WhatsApp) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may also like...

2

  1. #எமில்புளோறன்ஸ்
    #நாவற்காடு
    #VINOTH அண்ணா
    இனிய நள்ளிரவு வணக்கம்
    நானும் POWER GEN SECURITY OFFICE யில் வசந்தம் வானொலில்
    **நட்சத்திர வானம் **நிகழ்ச்சியை
    சத்தமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்
    என்னையும் நிகழ்ச்சியோடு இணைத்துக்கொண்டு பாடல்தாருங்கள் நிகழ்ச்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo