Header

ஒப்போ F19 Pro, ஒப்போ F19 Pro+ அம்சங்கள்

ஒப்போ நிறுவனம் அதன் எஃப் 19 ப்ரோ மற்றும் எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என்கிற குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் வெளியான லீக்ஸ் தகவல் வெளிப்படுத்துகிறது.

மறுகையில் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் எஃப் 19 ப்ரோவின் அதே டிஸ்பிளே அளவைக் கொண்டிருக்கும். அதாவது 6.43 இன்ச் புல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வரும். நான்காவது சென்சாரின் விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை.

எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11 (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டு இயங்கும்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo