
தற்போது வாட்ஸ்அப் நிறுவனம், ட்விட்டர் வழியாக புதிய ம்யூட் வீடியோ அம்சமானது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
🤫For your eyes, not your ears. You can now mute the audio on your videos before adding them to your Status or sending in chat. Now available on Android.
— WhatsApp (@WhatsApp) February 26, 2021
“உங்கள் கண்களுக்கு மட்டுமே, உங்கள் காதுகளுக்கு அல்ல. உங்கள் வீடியோக்களில் உள்ள ஆடியோவை உங்கள் ஸ்டேட்ஸில் சேர்ப்பதற்கு முன் அல்லது சாட்டில் அனுப்புவதற்கு முன்பு அவற்றை ம்யூட் செய்யலாம். இப்போது ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது,” என்று வாட்ஸ்அப்பின் ட்வீட் கூறுகிறது.
நீங்கள் இந்த புதிய ம்யூட் வீடியோ அம்சத்தை வீடியோ எடிட்டிங் ஸ்க்ரீனில் காணலாம். அவுட்கோயிங் வீடியோவை ம்யூட் செய்ய ஸ்க்ரீனில் காணப்படும் வால்யூம் ஐகானை வெறுமனே கிளிக் செய்தால் போதும்
இந்த புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்காக எளிய வழிமுறைகள் இதோ:
01. முதலில், கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் ஆப்பை திறந்து அப்டேட் விருப்பத்தைக் கிளிக் செய்க (ஆட்டோ டவுன்லோட் விருப்பம் இயக்கப்பட்டிருந்தால், ஆப் தானாகவே அப்டேட் ஆகியிருக்கும்)
02. ஆப் அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு புதுப்பிக்கப்பட்டதும், அதை ஸ்மார்ட்போனில் அதை திறக்கவும்.
03. ம்யூட் வீடியோ அம்சம் தனிப்பட்ட சாட் மற்றும் ஸ்டேட்டஸ் மோடில் அணுக கிடைக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ஒரு வீடியோவை (சாட் வழியாகவோ அல்லது ஸ்டேட்டஸ் வழியாகவோ) ரெகார்ட் செய்யவும்.
04. ரெக்கார்ட் செய்ததும், மேல் இடது மூலையில் ஒரு வால்யூம் ஐகானைக் காண்பீர்கள், குறிப்பிட்ட வீடியோவை ம்யூட் செய்ய அதை டேப் செய்யவும், அவ்வளவுதான். தற்போது அந்த வீடியோ எந்தவிதமான சவுண்டும் இல்லாமல் ம்யூட் செய்யப்பட்டு பெறுநருக்கோ அல்லது ஸ்டேட்ஸிற்கோ அனுப்பப்படும்.
பேக்கிரவுண்டில் எந்த ஆடியோ இடையூறும் இல்லாமல் தங்கள் வீடியோக்களைப் பகிர விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம.
இந்த இடத்தில் வாட்ஸ்அப்பின் “உடன்பிறப்பான” இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே போஸ்ட்டுகள் மற்றும் ஸ்டோரீஸ்களில் ம்யூட் வீடியோ விருப்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வாட்ஸ்அப் ம்யூட் வீடியோ அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த இயங்குதளம், எப்போது iOS தளத்தில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என்கிற டைம்லைனை இதுவரை பகிரவில்லை
0