
Zoom என்னும், வீடியோ கான்பரன்சிங் செயலி மிகவும் பிரபலமாகிவிட்டது, ஏனெனில் COVID-19 காரணமாக வீட்டிலிருந்து வேலை அதாவது work-from-home, என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இதன் காரணமாக நிறுவனங்கள் பெரிய அளவில் ஜூம் செயலியை பயன்படுத்துவதன் காரணமாக, ஜூமின் வருவாய் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
திங்களன்று, நிறுவனம் அதன் வருவாய் கடந்த ஆண்டை 326 சதவீதம் உயர்ந்து, 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அறிவித்தது. கடந்த காலாண்டில் செயலியின் விற்பனை 369 சதவீதம் அதிகரித்து 882.5 மில்லியன் டாலராக இருந்தது.
ஜூம் , என்பது ஒன்பது வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி. இது கொரோனாதொற்றுநோய் (Corona Virus) பரவலின் போது மிகவும் வளர்ச்சியை கண்ட பரவலாக அதிகம் பயன்படுத்தப்பட்ட பல செயலிகளில் ஒன்றாகும். உலகளாவிய தடுப்பூசி நடவடிக்கைகள் வேகம் பெறும் நிலையில், தொற்றுநோயில் இருந்து உலகம் எவ்வாறு மீள்கிறது என்பதை பொறுத்து ஜூமின் எதிர்காலம் இருக்கும்.