
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், இன்ஸ்டாகிராமில் (Instagram) தன் கணவன் Like செய்த பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து கணவருக்கு மனைவி பரிசாக கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதலர்களுக்கு காதலர் தினம் (Valentine’s Day) ஒரு சிறப்பான தினம் தான். அன்றைய தினத்தில், தனது காதலர்களுக்கு ஸ்பெஷலான பரிசுகளை கொடுத்து அசத்த வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் பெண் ஒருவர் வித்தியாசமாக யோசித்து, தனது கணவனுக்கு காதலர் தினத்தில் பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அப்படி என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
அந்த வீடியோவில் அவர் கிப் பேக் செய்கிறார். பின், ‘காதலர் தினத்திற்காக அவரவர் வாங்கியதை எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள், என்னுடையதைப் நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்’ என கூறியவாறு, இன்ஸ்டாகிராமில் தன் கணவன் லைக்ஸ் செய்த பெண்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து வைத்திருப்பதை காண்பிக்கிறார். ‘நான் என் கணவருக்கு இந்த கிப்டை தயார் செய்திருக்கிறேன். இன்ஸ்டாகிராமில் அவர் லைக்ஸ் செய்த அனைத்து பெண்களின் படங்களையும் இதில் வைத்திருக்கிறேன். இதனை அவர் விரும்புவார் என்று நம்புகிறேன்’ என கூறுகிறார்.
17 வினாடிகள் மட்டுமே ஒடும் இந்த வீடியோவை, பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது அன்பு பரிசு போல் தெரியவில்லை. கணவருக்கு அளிக்கும் அதிர்ச்சி வைத்தியம் போல் இருக்கிறது என்ற ரீதியில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
பாயும் புலியும் கிச்சு-கிச்சு மூட்டினால் சிரிக்கும், வைரலாகும் Tiger Laughing Video
-
கோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லலாமா?
0