Header

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த 10 திரைப்படங்கள்

முள்ளும் மலரும்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு மற்றும் ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். ஆரம்பத்தில் சரத் பாபு கதாபாத்திரத்தில் நடிக தேர்வானவர் உலக நாயகன் கமலஹாசன். இருந்தும் அவர் வேறொரு படப்பிடிப்பில் இருந்த காரணத்தினால் கலஹாசனால் நடிக்கமுடியவில்லை.

mulum malarumக்கான பட முடிவுகள்

பாட்ஷா

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படம். ஆரம்பத்தில் இந்த படத்தை இயக்க இருந்தது இயக்குனர் மற்றும் நடிகர் மனோ பாலா. ஆனால் அண்ணாமலை திரைப்படம் குடுத்த வெற்றியினால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.இன்று வரைக்கும் பல திரைப்படங்களில் பாட்ஷாவின் தாக்கம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பாட்ஷாவின் 2ஆம் பாகத்தை எடுக்க பல தடவை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா முயன்றும் ரஜினி அதில் நடிக மறுத்துவிட்டார்.

baadsha rajiniக்கான பட முடிவுகள்

சிவாஜி

ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ். இயக்குனர் ஷங்கர் பல தடவை முயன்றும் இறுதியில் தான் ரஜினியினை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அப்பிடி வாய்ப்பு கிடைத்தது கூட சுவரசியமான சம்பவம் தான் காரணம் ஆரம்பத்தில் ஷங்கர் ரஜினிக்கு கூறிய கதைகள் ஐ மற்றும் எந்திரன். ஆனால் ரஜினிக்கு நம்பிக்கை இருக்கவில்லை,எனவே தனக்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ரஜினியிடம் கூறிய கதைதான் இந்த சிவாஜி.

sivajiக்கான பட முடிவுகள்

தில்லு முள்ளு

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் எடுத்த முதல் முழு நீள நகைச்சுவை படம். ரஜினிகாந்த் மீசை இல்லாமல் நடித்த முதல் படமும் தில்லுமுல்லுதான். இறுதியில் கமல் ஒரு சட்டத்தரணியாக வரும் காட்சி பலரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

thillu mulluக்கான பட முடிவுகள்

எந்திரன்

எந்திரன் படத்தினை தமிழில் எடுத்தால் அவ்வளவு வருமானத்தை பெற முடியாது என்று எல்லோரும் கூறியதால். ஹிந்தியில் இப்படத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் முயற்சி செய்துகொண்டிருந்தார்.  இந்தநேரம் யாரும் எதிர்பாராத நிகழ்வாக தமிழில் சிவாஜி மிகப்பெரிய வசூல் சாதனையினை நிகழ்த்தியிருந்தது. இதை பார்த்த ஷங்கர் ஹிந்தியில் படத்தை எடுக்கும் முடிவை மாற்றி தமிழில் எடுக்க முயட்சி செய்தார். ஆரம்பத்தில் நடிக மறுத்தாலும் ஷங்கருக்காக இந்த படத்தில் நடிக ரஜினி சம்மதித்தார். படப்பிடிப்பி ஆரம்பித்து சில நாட்களில் தயாரிப்பாளருடன் சிக்கல் வர இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பு Sun Picturesக்கு சென்றது. Sun Pictures தயாரித்த முதல் படமும் எந்திரன்தான்.

enthiranக்கான பட முடிவுகள்

 

அண்ணாமலை

இயக்குனர் வசந்த் இயக்க, ரஜினி நடிக்க பாலச்சந்தர் தயாரிக்க ஒரு படம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சில கருத்து முரண்பாடுகளால் படப்பிடிப்புக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் படத்தில் இருந்து விலகிவிட்டார்இயக்குனர் வசந்த். இந்த இக்கட்டான நிலையில்தான் பாலச்சந்தர் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து ஒரு கதையினை உருவாக்கி படத்தை எடுத்துத்தரும் படி கேட்டுள்ளார்.

annamalai movieக்கான பட முடிவுகள்

முத்து

மலையாளத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படம் ஒன்றை தமிழில் நடிக்க ரஜினி முடிவெடுத்தார். அந்த படத்தை இயக்கம் பொறுப்பை ரவிக்குமாருக்கு கொடுத்தார். ரவிக்குமாருக்கோ இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை. எனவே ரஜினியின் அனுமதியுடன் படத்தில் கருவினை மாற்றாமல் திரைக்கதையினை முழுமையாக மாற்றி ஒரு எடுத்த திரைப்படம்தான் இந்த முத்து

muththu movieக்கான பட முடிவுகள்

அருணாச்சலம்

முத்து திரைப்படம் போன்றுதான் அருணாச்சலமும். சினிமாவில் குறைந்த ஊதியத்தை பெரும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்து கொடுக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்தார். ரஜினிக்கும் தயாரிப்பாளரின் முடிவு பிடித்துப்போக படத்தில் இலவசமாக நடிப்பதாக ஒப்புக்கொண்டார். உள்ளத்தை அள்ளித்தா கொடுத்த வெற்றியினால் இந்த படத்தை இயக்கம் வாய்ப்பு சுந்தர் சீ க்கு வழங்கப்பட்டது. சுந்தர் சீ க்கும் படத்தின் கதை பிடிக்கவில்லை. ரஜினியின் சம்மதத்துடன் கருவினை அடிப்படையாக வைத்து முழுப்படத்தின் கதையினையும் மாற்றி எடுத்த படம்தான் இந்த அருணாச்சலம்

arunachalamக்கான பட முடிவுகள்

ஆறில் இருந்து அறுபது வரை

பிரியா படத்தின் படப்பிடிப்பினை சிங்கப்பூரில் நடத்திவிட்டு ரஜினி இயக்குனர் முத்துராமன் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் இந்தியாவுக்கு மீண்டும் வருகை தந்தனர். இந்த நேரம் சிங்கப்பூரோடு இந்தியாவை ஒப்பிட்டு பார்த்து நம் வாழ்க்கை எவ்வளவு கீழ் மட்டத்தில் இருக்கிறது என்பதை முத்துராமன் உணர்ந்துகொண்டார். இதன் தாக்கத்தில் ஒரு கதையினை எழுதி தரும்படி பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் முத்துராமன். அப்படி உருவாகிய கதைதான் ஆறில் இருந்து அறுபதுவரை. ஆனால் இந்த படத்தில் நடிக முதலில் ரஜினி விரும்பவில்லை. முத்துராமனும் பஞ்சு அருணாச்சலமும் ரஜினியின் மனதினை மாற்றி இந்த படம் உனக்கு நல்லதொரு பெயரினை தரும் என்று கூறி நடிக சம்மதித்தனர். அவர்கள் கூறியது போலவே இந்த படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக மாறியது

aaril irunthu arubathu varaiக்கான பட முடிவுகள்

சந்திரமுகி

படையப்பா வெற்றிக்கு பிறகு இன்னும் ஒரு வெற்றியினை கொடுக்க கே ஸ் ரவிக்குமாரும் ரஜினியும் முடிவே செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் எடுக்க இருந்த திரைப்படம் ஜக்குபாய். அந்த நேரம் ரஜினி P.வாசு அவர்கள் இயக்கிய ஒரு மலையாள திரைப்படத்தை பார்வையிட திரையரங்கு சென்றார். படமும் பிடித்து போக அதை தமிழில் எடுக்க ரஜினி ரவிகுமாரிடம் கேட்டார். வாசுவும் ரவிக்குமாரும் நெருக்கிய நண்பர்கள் என்பதால் மலையாள படத்தை எடுத்த P.வாசுவையே இயக்க வையுங்கள் என்று பரிந்துரைத்தார் ரவிக்குமார்.

chandramukhiக்கான பட முடிவுகள்

logo